ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

March 30, 2015

3rd Word on the Cross By Jesus - 33rd day in Lent

"Jesus said to his mother: "Woman, this is your son."Then he said to the disciple: "This is your mother."

யோவான்19:26,27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

ஆண்டவராகிய இயேசு கல்வாரி சிலுவையில் பேசிய மூன்றாவது வார்த்தை
         தாகம் தாகமென்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் என்ற பாடல் படி.ஆண்டவரின் கண்கள் அந்தப் பாடுகளின் மத்தியில் அந்தகேடு அடைந்து;உடலெல்லாம் காயங்கள்;சிரசிலே முள்முடியின்  வேதனை மூன்று ஆணிகளில் தொங்கியவர் தேடுகின்றார்.
        கண்டதோ அன்னை மரியாளின் பரிதவித்த நிலையில் சிலுவையண்டை, அருகே தன்மேல் மார்பில் சாய்ந்து உறவாடிய யோவனைத் தவிர தன் சீடர்கள் ஒருவரும் இல்லை.உடனே  யோவான்19:26,27 லுள்ள படி கூறினார்.

  • ஆண்டவர் பேதிருவுக்கு கூறியவை:
 மற்கு 14:27-31
 லூக்கா22:31,32,38

  • ஆண்டவராகிய இயேசு தன் மரணத்தைப்பற்றி 3முறைகள் சீடருக்குக் கூறித்தேற்றுதல்
மத்தேயு20:17- 19,மாற்கு10:32,34,லூக்கா18:32- 34

  • சீடர்களைப் பற்றி கூறுதல்:
           மற்கு 14:27,யோவான்16:32,ரோமர் 1:22

  • மரணத்துக்குப் பின் அவர்கள் தேற்றப்படல்:
            யோவான்14:16 - 31

  • வாக்குத் தத்தமுள்ள முதலாங் கர்பனை நிறைவேறுதல்:
            எபேசியர்6:3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
                   நம் வாழ்வில் நம் பேற்றோரை நடத்துதல் ,பிதாவின் சித்தத்தையே நிறைவேற்ற வந்தேன் என்ற ஆண்டவர்
                   இயேசு மரணப்பரியந்தம்     தன்னை தழ்த்தினார்.
  • பெத்தானியாவிலுள்ள ஒரு வீட்டிற்கு உணவு அருந்த இயேசு போயிருந்தார்.லாசரு,மார்த்தாள்,மரியாள்.
               லூக்கா10: 39 - 42,யோவான்14:23
நம்மை நாமே சோதனை செய்வோம்
               நாம் மேற்கண்ட மூவரில் யாரைப் போலிருக்கிறோம் 
  தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். லூக்கா10:42

2 தீமோத்தேயு3:12
              அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
நமக்கு ஆவியிலும்,ஆத்துமாவிலும் ,சரீரத்திலும் பிசாசானவன் போராட்டத்தையும்,பலவீனத்தையும் கொண்டு வருவான்.விசுவாசத்தை கெடுப்பதுவே அவன் வேலை.ஆனால் இந்த உலகிலிருப்பவனை விட  எங்களுக்குளிருக்கும் தேவன் பெரியவர் என்று கர்த்தரை மகிமைப் படுத்துவோம்.விசுவாசத்தில் நிலைத்திருப்போம்

எபிரெயர்2:18:
         அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

1பேதுரு5:10
       கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

மனப்பாட வசனம்:
யோவான்14:23
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

Shared by Sis.Annal
3-27-2015 

No comments:

Post a Comment